இலங்கையில் வரிசை இல்லாத ஒரேயொரு எரிபொருள் நிலையம்
இலங்கையில் வரிசை இல்லாத ஒரே எரிபொருள் நிலையம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வித வாடிக்கையாளரும் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை குளியாபிட்டிய தண்டகமுவ ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்னெடுத்துள்ளது. அந்த நடைமுறை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய நடைமுறை

“Poling without polling” என்ற பெயரில் விண்ணப்ப படிவம் மூலம் இந்த விசேட எரிபொருள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விண்ணப்பம் மூலம், வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரம் ஒதுக்கப்படுகிறது.
இந்த வசதியைப் பெற, தேசிய எரிபொருள் அட்டையில் பதிவு செய்து, QR குறியீட்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
மக்களின் பொறுப்பான செயற்பாடு

மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதால் வரிசையின்றி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெறும் ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையமாக இது மாறியுள்ளது.
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, எரிபெருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam