பசில் எதற்காக இந்தியா சென்றார்! - சபையில் ரணில் கேள்வி

India Parliament Ranil Wickremesinghe Basil Rajapaksa
By Murali Dec 08, 2021 03:32 AM GMT
Report

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு ஏன் விஜயம் செய்தார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று பேசிய அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைக் கேள்வியொன்றை எழுப்பிய விக்கிரமசிங்க, வெளிநாட்டு நாணய கையிருப்பு குறித்த விவரங்களை கடந்த வாரம் சபையில் முன்வைப்பதாக அரசாங்கம் உறுதியளித்ததாகக் கூறினார்.

“இருப்பினும், அரசாங்கம் இதுவரை அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போது இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

நாங்கள் தேடிய தகவல்களை, எங்களுக்குத் தெரிவிக்காமல், இந்தியாவிடம் முன்வைக்கின்றனர். இந்த தகவலை நிதியமைச்சர் ஏன் எங்களிடம் தெரிவிக்க முடியாது? என்று குறிப்பிட்டார்.

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு தற்போது சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கியின் ஆளுநர் இணையத்தள மாநாட்டின் போது தெரிவித்தார். இதை எங்களிடம் வெளிப்படுத்த ஏன் தயங்குகிறீர்கள்?

இது உண்மையில் நமது சிறப்புரிமைகளை மீறுவதாகும். பட்ஜெட் விவாதத்தின் போது நிதி அமைச்சர் சபையில் இருக்க வேண்டும். நிதியமைச்சர் இல்லாமல் பட்ஜெட் விவாதம் நடைபெறுவது இதுவே முதல் முறை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, “வெளிநாட்டு நாணய கையிருப்பு உள்ளிட்ட நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான விரிவான பதில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உரையாடலில் தலையிட்ட சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன, நிதியமைச்சர் அவ்வப்போது விவாதத்தில் கலந்துகொள்வதாகக் குறிப்பிட்டார். “சிறப்பு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் இருக்கும் போது, ​​அவர் அதில் கலந்து கொள்ள வேண்டும். கடந்த நிதி அமைச்சர்களின் நடத்தை பற்றி எனக்கு தெரியும் என்றார்.

வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது எந்தவொரு நிதியமைச்சரும் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என விக்கிரமசிங்க தெரிவித்தார். "அவர் ஏன் இந்தியாவிற்கு புனித யாத்திரையில் கலந்து கொள்ள விரும்புகிறார் என்பதை எங்களிடம் கூற முடியுமா" என்று அவர் கேட்டார்.

சேமசிங்க, “நிதி அமைச்சர் தனது கடமைகளை சரியாகச் செய்துள்ளார். அவர் பல அமர்வுகளில் கலந்து கொண்டார். விக்கிரமசிங்க பல அமர்வுகளில் கலந்து கொள்ளாததுதான் பிரச்சினை.”

விக்கிரமசிங்க: “மற்ற நாடுகளின் முன் அரசாங்கம் மண்டியிடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார். பிறகு ஏன் நிதி அமைச்சர் இந்தியா சென்றார்?” இதன்போது சேமசிங்க கூறுகையில், எதிர்க்கட்சிகளின் கடமையை விக்ரமசிங்க ஒற்றைக் கையாக செய்து வருகிறார்.

"அதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பலவேகயாவும் (SJB) இது போன்ற கேள்விகளைக் கேட்பதில்லை என குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US