யாருக்கு வாக்களிக்க வேண்டும்: கர்தினாலின் அறிவுரை
மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவுருத்தல் வழங்கியுள்ளார்.
தீர்வு வழங்க முடியாத தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கரிசனை கொள்ளாத தலைவர்களுக்கு எந்தக் காலத்திலும் இனி வாக்களிக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்திரமான திட்டமொன்றுடன் கூடிய ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய நீதியை மதிக்கும் தலைமைத்துவத்தினாலேயே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியிருக்க வீடுகள் இல்லாத குடும்பங்கள் இருக்கும் நிலைமையில், நகர அபிவிருத்தி அமைச்சு டொலர்களை உழைப்பதற்காக அதி சொகுசு ஆடம்பர வீடுகள் சிலவற்ற நிர்மாணித்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்கிறது.
அந்த அமைச்சு இருப்பது வெளிநாட்டவர்களின் விருப்பு, வெறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவா என கேள்வி எழுப்புகிறேன்.
இப்படியானவர்களுக்கு வாக்களித்து வீடுகளை நிர்மாணித்து தருமாறு கோரிக்கை விடுக்க வேண்டாம். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசியல்வாிகள் வீடுகளுக்கு செல்ல வேண்டும்.
கடந்த காலங்களில் தொகுதி முறை தேர்தல் நடைமுறையில் இருந்தது எனவும் அந்தக் காலத்தில் தொகுதி மக்களை உறுப்பினர்கள் கவனித்துக் கொண்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அவ்வாறான முறைமை கிடையாது எனவும் முழு மாவட்டத்திலும் வாக்கு சேகரிக்க நேரிட்டுள்ளது எனவும், வாக்களித்த மக்கள் விரட்டியடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உணர்வூபூர்வமாக இல்லாத அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் . இனி வரும் காலங்களில் இவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.