10 நாட்கள் காலக்கெடு கொடுத்தும் அடங்க மறுக்கும் ஈரான்: தோல்வியை ஒப்புக் கொள்ளுமா அமெரிக்கா..!
சுமாராக ஒரு மாதமாக நடைபெற்று வரும் ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் எந்த தரப்பு வெற்றியை நெருங்கியுள்ளது என்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் மற்றும் காணொளிகள் பலவும் போலியான வின்மத்தையே காட்டுகின்றன.
வல்லரசு நாடான அமெரிக்காவுடன் தளராது மோதிக் கொண்டிருக்கும் ஈரான், இந்த போரில் முன்னிலை வகிப்பதாக சிலர் கருதுகின்றனர்.
இதற்குக் காரணமாக, தன்னை எதிரி நாடுகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் திறனை ஈரான் வெளிப்படுத்தி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும், போரை நீடிக்கச் செய்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதே ஈரானின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி எதிர்பார்த்தது போன்று தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருந்தாலும், ஈரானில் ஆட்சிமாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டால், இந்த போரில் ஈரான் முன்னிலை பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆழமாக “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி ஆராய்கிறது.
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri