ஜனாதிபதி தேர்தலில் விமலின் ஆதரவு யாருக்கு..! - செய்திகளின் தொகுப்பு
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை பெயரிடப்பட்டுள்ள எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கமாட்டோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
''ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான தேவைப்பாடு அரசுக்கு உள்ளது. ஆனால் அந்த முயற்சி கைகூடாது.
ஆளுங்கட்சியினர் விரும்பாவிட்டாலும் தேர்தலை நடத்தியாக வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை பெயரிடப்பட்டுள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் நாம் ஆதரவு வழங்கமாட்டோம்.
முற்போக்கு சக்திகளை இணைத்துக்கொண்ட கூட்டணியாகவே தேர்தலை எதிர்கொள்வோம். நாம் எமது வேட்பாளருடன்தான் தேர்தலுக்கு வருவோம்" என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய றேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |