அமைச்சர்கள் வெளிநாடு செல்ல டொலர்கள் எங்கிருந்து கிடைத்தது?
நாட்டில் குழந்தைகளுக்கான பால் மா பொதியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாத நேரத்தில், அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல டொலர்கள் எங்கிருந்து கிடைத்தது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“மக்களுக்கான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் டொலர்கள் இல்லை எனவும், அரசியல்வாதிகள் குடும்பத்துடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கும், ஆலயங்களில் பூஜைகள் செய்வதற்கும் டொலர்கள் இருக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான இடதுசாரி அரசாங்கங்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்குப் பசியும் பட்டினியும் மட்டுமே மிஞ்சுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
