இனப்பிரச்சினை முடிந்துவிட்டது ஒப்புக்கொண்டாரா சுமந்திரன்! குணா கவியழகன் கேள்வி
பிரித்தானியாவில் தென்னாசியா மற்றும் கொமன் வெல்த்துக்கான வெளிவிவாகர அமைச்சர் லோட் தரிக் அஃமட்டை சந்தித்து திரு M A Sumanthiran உரையாடியிருந்தார்.
அந்த சந்திப்பு பற்றி தனது கீச்சகப் பக்கத்தில் அவர் இனப்பிரச்சினைக்கு பின்னான பொறுப்பு சொல்லல் பற்றி பேசியதாக பதிவிட்டிருந்தார்.
யுத்தத்திற்கு பின்னான பொறுப்பு சொல்லலோ, இடைமாறு கால நீதி வழங்கும் செயல்பாடோ, இரு தரப்பு பேச்சுவார்த்தையோ, தோல்வியில் முடிந்திருக்கும் நிலையில், இனப்பிரச்சனைக்கு பின்னான நிகழ்ச்சி நிரல் பற்றிய பேச்சை ஒப்புகொள்வது அரசியல் அழிவாக முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சிறுபான்மை குழுக்களின் உரிமைக்கு மரியாதை வழங்கும் முக்கியத்துவம் பற்றியும் உரையாடப்பட்டதாக அவர் இட்ட பதிவு மீண்டும் தமிழ் மக்களை சிறுபான்மை குழுவாக கீழிறக்கும் செயலுக்கு சுமந்திரன் ஒத்துழைப்பதாக இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.
முன்னதாக அமெரிக்க சந்திப்பில் சிறுபான்மை குழுவாக தமிழர்களை சித்தரித்ததை தமிழ் டயஸ்போற அலையன்ஸ் (Tamil Diaspora Alliance) என்ற புதிய அமைப்பு இதனை மனித உரிமை நெருக்கடியாக கேள்விக்கு உட்படுத்தி முதல் முறையாக 'தமிழ் மக்கள்' என்று அமெரிக்க வெளியுறவு துறையை ஏற்கவைத்தது தெரிந்ததே.
மக்கள் சமூகம் என்பது சர்வதேச சட்டங்களின் படி ஒரு தனித்துவமான தேசிய பண்பு கொண்டது.
முழுமையான விவரம் அறிய வீடியோவை பார்க்கவும்.