ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை உள்ளது! கொந்தளிக்கும் சோபித தேரர்
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாடு ஒரு பார தூரமான குற்றம் என ஒமல்பே சோபித தேரர்(Omalbe Sobitha Tero) தெரிவித்துள்ளார்.
“நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன“ எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தேசிய வளங்களை தன்னிச்சையாக விற்பனை செய்வதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தாங்கள் ஆட்சியில் நீடிக்கப்போவதில்லை என்ற எண்ணத்தில் நாட்டை ஆட்சி செய்கிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால் ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவில் நடந்ததைப் போன்ற நிலைமையே இலங்கையிலும் ஏற்படும் என்றும் சோபித தேரர் எச்சரித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
