உலகிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை
உலகிலேயே அதிக வருடாந்த பணவீக்க வீதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே, ஹென்கே, பணவீக்க குறியீட்டை புதுப்பிக்கும் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பணவீக்கம்

இந்த அறிக்கையின்படி, சிம்பாப்வே மட்டுமே இலங்கையை விட அதிக பணவீக்கத்தைக் காட்டும் நாடாக உள்ளது. இலங்கைக்கு அடுத்தபடியாக துருக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே கண்காணித்து வருகிறார். இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 130 வீதத்திற்கு மேல் செல்லும் என முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam