அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு என்ன நடந்தது?:வழங்கும் தகவல்களில் முரண்பாடுகள்!
அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக தற்போது வெளியிடும் தகவல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பாடாக இருந்து வருவதை காண முடிகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து அவரது தனிப்பட்ட செயலாளராகவும் அண்மைய காலமாக நாடாளுமன்ற விவகார செயலாளராகவும் கடமையாற்றிய உதித் லொக்கு பண்டார,( Udith lokubandara) கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த விடயம் பகிரங்கமான செய்தி.
எனினும் அப்படியான சம்பவம் நடந்தது தனக்கு தெரியாது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். சாதாரணமாக தந்தையின் பணத்தை புதல்வர்களே எடுப்பார்கள் என்பதால், வேறு ஒருவர் இவ்வாறு பணத்தை எடுத்தமை சம்பந்தமாக தான் அறியாத விடயத்தை விசாரித்து பார்க்க வேண்டும் என நாமல் பகிரங்கமாக ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்ததை உதித் லொக்கு பண்டார தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். உதித் லொக்கு பண்டார, நாமல் ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான நண்பர்.
அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய சம்பவத்தையும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மறுத்திருந்தார். தனது தந்தை நோயாளி ஒருவரை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றதாகவும் அப்படி சென்ற தந்தை ஊடகங்கள் நோயாளியாக மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனினும் பிரதமரின் மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ச, (Chamal Rajapaksa) பிரதமர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.
கம்பளை நாரான்விட ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையில் புத்தர் சிலை ஒன்றை திறந்து வைக்கும் சந்தர்ப்பத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். பிரதமர் திடீர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதால், அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முடியாது போனது என சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
உதித் லொக்கு பண்டார வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்தது பற்றிய விடயம் பிரதமர் சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது தெரியவந்துள்ளது.
அமைச்சர் நாமல் ராஜபக்ச இவ்வாறு பொய்யான தகவல்களை ஊடகங்களிடம் கூறிய இந்த இரண்டு சம்பவங்களும் சில தினங்களுக்கு முன்பே நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கஞ்சியும் செல்ஃபியும் 1 நாள் முன்

அஜித்தின் திருப்பதி படத்தில் சதாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா?- தற்போது கூறிய இயக்குனர் Cineulagam

மேஷ ராசியில் சுக்கிரன்! 25 நாட்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்: யாருக்கு பாதகம்? யாருக்கு சாதகம்? Manithan

55 வயதில் கனடா சாக்லேட் நிறுவனத்தில் வேலை! மகிழ்ச்சியில் துள்ளிய நபருக்கு தெரியவந்த உண்மை... எச்சரிக்கை செய்தி News Lankasri

11 நாள் முடிவில் உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- சூப்பர் கலெக்ஷன் Cineulagam

பிறக்கும் போது லட்சுமியின் வரத்தினை பெற்ற 4 ராசி - பணத்திற்கு பஞ்சமே இருக்காது... அதிர்ஷ்டம் தேடி ஓடி வரும்! Manithan

ரஷ்ய செல்வந்தர் செய்த சமயோகிதச் செயலால் அவர் மீதான தடையை நீக்கவேண்டிய நிலையில் சுவிட்சர்லாந்து News Lankasri

மாத இறுதியில் லட்சுமி தேவியின் அருளால் செல்வந்தராக போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022