கோட்டாபய சாதித்தது என்ன? மக்கள் முட்டாள்களா? (Video)
அரசாங்கத்துக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள், போராட்டங்களுக்கு மத்தியில், பதவிக்காலத்தின் மூன்றாவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2019 நவம்பர் 16ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து, அவர் எதிர்பாராத பெரும் வெற்றியைப் பெற்றிருந்தார்.
69 லட்சம் மக்களின் வாக்குகளுடன், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நவம்பர் 19ஆம் திகதி அனுராதபுரவில் பதவியைப் பொறுப்பேற்றார் சிங்கள பௌத்த மக்களின் பேராதரவுடன் தெரிவு செய்யப்பட்டவர் என்ற அடையாளத்துடன் ஜனாதிபதியாகிய அவரைச் சுற்றி மிகப் பெரியதொரு விம்பம் உருவாக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வென்றவர் என சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை அவரை உச்சிக்கு இழுத்துச் சென்றது.
ஆனால், அந்த உச்சநிலையை சமாளிக்க முடியாமல் திணறுகின்ற நிலையைத் தான், இரண்டு ஆண்டுகளிலும் அவதானிக்க முடிகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது எமது விசேட தொகுப்பு,
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri