ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய சதி: புடின் குற்றச்சாட்டு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகள் தமது நாட்டுக்க எதிராக பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதன்படி மேற்கத்திய நாடுகளுடன் நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷ்யாவின் உள்நாட்டு ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அமைப்புக்கள் பிரிவினைவாத இயக்கங்களை ஆதரிப்பதாகவும், இது ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் மோதல்
உக்ரைன் மோதலில் தீர்வு காண்பது மற்றும் நேட்டோ செலவினத்தை விரிவுப்படுத்துதல் தொடர்பான அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு தொடர்ந்து சதி செய்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புத்தன்மையை சுட்டிக்காட்டி, நேட்டோ தற்போது அதன் உறுப்பினர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக பாதுகாப்பு செலவினங்களை உயர்த்தவும், ஐரோப்பாவில் இராணுவக் கட்டமைப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri