லசந்த விக்கிரமசேகரவின் கொலை : கதறியழுத தாய்
சுட்டுக் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகரவின் பூதவுடல் மக்கள் வெல்லத்தின் மத்தியில் நேற்று (26.10.2025) அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் மத்தியில் பிரதேச சபைத் தலைவரது தாய் கதறியழுதவாறு, 'மரணமடைந்த தனது மகனின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டார்.
எனது மகனுக்கு கொலை அச்சுறுத்தல் இருந்து.அது தொடர்பில் அனைத்து விடயங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
ஏன் சிறையில் அடைக்கவில்லை..
அதற்கான உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.பாதுகாப்பு கோரியும் வழங்கப்படவில்லை. மரணத்திற்கான உரிய காரணத்தை கண்டறிந்து பக்கச்சர்பற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவும்.

எனது மகன் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் ஏன் சிறையில் அடைக்கவில்லை.அவருக்கு ஏன் அரசியலில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கினீர்கள் என கதறியழுதவாறு தெரிவித்துள்ளார்.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam