இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!
இலங்கையின் வானிலையில் இன்று மாலை அல்லது இரவில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சபரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் இன்று காலையில் மூடுபனி நிலைகளை எதிர்பார்க்கலாம்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை சூரியன் இன்று பூநகரி,, மற்றும் சுண்டிக்குளம் சரணாலயம் போன்ற இடங்களுக்கு மதியம் 12:10 மணியளவில் நேரடியான உச்சத்தை கொடுக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
