தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை! வடக்கு - கிழக்கு மக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை..

Sri Lankan Peoples Climate Change Eastern Province Northern Province of Sri Lanka Weather
By Erimalai Nov 27, 2025 01:41 AM GMT
Report

அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது.

இது இன்று(27) காலை அம்பாறை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறதுஎன யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் மாவீரர்கள் கற்பித்த பாடம்..

சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் மாவீரர்கள் கற்பித்த பாடம்..

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

நிலவும் வானிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை! வடக்கு - கிழக்கு மக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை.. | Weather Forecast Sri Lanka Today

இது தொடர்ந்து கிழக்கு கரையோரமாக நகர்ந்து எதிர்வரும் 28ம் திகதி மட்டக்களப்புக்கு மிக அண்மையாகவும், 29ம் திகதி திருகோணமலைக்கு அண்மையாகவும், பின்னர் முல்லைத்தீவுக்கு அண்மையாகவும் நிலை கொள்ளும் வாய்ப்புள்ளது.

இது எதிர்வரும் இன்று (27.11.2025) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று எதிர்வரும் 29.11.2025 அல்லது 30.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மலாக்கா நீரிணைக்கு அருகில் தொன்றியுள்ள புயலுக்கு சென்யார் எனப் பெயரிடப்பட்டுள்ளமையால், இந்த தாழமுக்கம் புயலானால் அதற்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டித்வா( Ditwah)- இயற்கையால் அமைந்த ஏரி- எனப் பெயரிடப்படும்.

இந்த தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக மழை பெற்று வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் இந்த மழை எதிர்வரும் 30.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய CIDயிடம் சிக்குவாரா ரணில்!

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய CIDயிடம் சிக்குவாரா ரணில்!

கனமழை 

குறிப்பாக இன்று முதல் கிழக்கு மாகாணத்தில்  கனமழை கிடைக்க தொடங்கும். கிழக்கு மாகாணத்திற்கு 27,28,29 ம் திகதிகள் மிக முக்கியமான நாட்களாகும்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நேற்று மழை கிடைத்துள்ளது. நேற்று இரவு முதல் வடக்கு மாகாணத்தில் மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். வடக்கு மாகாணத்தில் 28 ,29, 30 ம் திகதிகளில் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை! வடக்கு - கிழக்கு மக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை.. | Weather Forecast Sri Lanka Today

கிழக்கு மாகாணத்தில் மிக வேகமான காற்று வீசுகை ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இது எதிர்வரும் 30ம் திகதி வரை தொடரும். வடக்கு மாகாணத்தில் தற்போது வீசத் தொடங்கியுள்ளது. இது எதிர்வரும் 01.12.2025 வரை தொடரும்.

கிழக்கு மாகாணத்தில் பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. ஆறுகள் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளன.

மாவீரர்களை வைத்து சொத்துக்களை குவிக்கும் சில புலம்பெயர் தமிழர்கள்..

மாவீரர்களை வைத்து சொத்துக்களை குவிக்கும் சில புலம்பெயர் தமிழர்கள்..

 வெள்ள நிகழ்வுகள்

பல இடங்களில் வெள்ள நிகழ்வுகள் பதிவாக தொடங்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் மூன்று நாட்களும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப்பகுதி மற்றும் வெள்ள அனர்த்த வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

மிக வேகமான காற்றோடு மழை கிடைக்கும் என்பதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. கிழக்கு மாகாண மக்கள் தயவு செய்து உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 28 தொடக்கம் மிகக் கனமழை கிடைக்க தொடங்கும்.

தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை! வடக்கு - கிழக்கு மக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை.. | Weather Forecast Sri Lanka Today

ஏற்கெனவே வடக்கு மாகாணத்தில் சில சிறிய குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. கடநீரேரிகள் நீர் நிறைந்து முகத்துவாரங்கள் வெட்டி விடப்பட்டுள்ளன.

ஆகவே வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்வரும் 28,29ம் திகதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மிக வேகமான காற்று வீசுகையும் மிகக் கன மழையும் கிடைக்கும் என்பதனால் வடக்கு மாகாண மக்கள் இந்நாட்களில் மிக அவதானமாக இருப்பது சிறந்தது. அதேவேளை மத்திய, தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் எதிர்வரும் 29.11.2025 வரை கனமழை தொடரும் வாய்ப்புள்ளது.

இதனோடு இணைந்த நிலச்சரிவு நிகழ்வுகளும் ஏற்படும் வாயப்புள்ளது.

முன்னெச்சரிக்கைகள்

இப்பிரதேசங்களின் பல நதிகள் ஏற்கெனவே தமது கொள்ளளவைத் தாண்டி பாய்ந்து கொண்டிருக்கின்றன.

பல பிரதேசங்களில் வெள்ள நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. எனவே இப்பகுதி மக்களும் அடுத்த மூன்று தினங்களுக்கும் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை! வடக்கு - கிழக்கு மக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை.. | Weather Forecast Sri Lanka Today

இந்த முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் மக்களை அச்சமூட்டுவதற்கானவை அல்ல. மாறாக மக்களை விழிப்பூட்டவும், தயார்ப்படுத்தவுமே.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. " சிறிய பாம்பானாலும் பெரிய தடி கொண்டு அடிக்க வேண்டும்". அது போன்றே காலநிலை சார் அனர்த்தங்களை போதுமான தயார்ப்படுத்தல் மூலம் இலகுவாக வெற்றி கொள்ளலாம்.

ஆகவே நாம் விழிப்படைந்து எம்மை பாதுகாத்துக் கொள்வோம். குறிப்பு: தற்போதைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முன்னறிவிப்பு வழங்கப்படுகின்றது. இதில் மாற்றங்கள் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US