திருகோணமலையில் தொடர் மழை: இரால் பாலத்தை ஊடறுத்து பாய்ந்த வெள்ள நீர்
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, மூதூர் - கட்டைபறிச்சான் பகுதியிலுள்ள இரால் பாலத்தை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்துள்ளது.
கனமழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மூதூர் இரால் பாலத்தை ஊடறுத்து வெள்ளம் பாய்வதால், இப்பாதை வழியே பிரயாணம் செய்யும் பொதுமக்களும் வாகனச் சாரதிகளும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பயணத்தை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
போக்குவரத்து மேலும் பாதிக்கப்படும் அபாயம்
தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்ப, நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இந்தப் பாதையினூடான போக்குவரத்து மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தப் பகுதியில் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் பிரயாணம் செய்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால், சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிகள் உடனடியாக நிலைமையை ஆராய்ந்து, பயணிகளுக்குத் தேவையான மாற்றுப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், வெள்ளம் வடிந்து செல்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan