காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் சாத்தியம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (02) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் (03) புயலாக வலுப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் செயற்படும் மீன்பிடி மற்றும் கடற் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி 9.5 வடக்கு அட்சரேகை மற்றும் 86.0 கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகாமையில் திருகோணமலையில் இருந்து சுமார் 550 கிலோமீற்றர் தொலைவில் மையங்கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு
இது நாளை (02) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் (03) புயலாக வலுப்பெறவுள்ளது.

இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4ம் திகதி வட தமிழக கடற்கரையை கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கிறது.
இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மேற்படி புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு கடற்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri