காலநிலை மாற்றம்! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் தொடரும் கனமழை தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது.
இந்த அறிவித்தல், இன்று (07) பிற்பகல் 2.00 மணி முதல் நாளை (08) பிற்பகல் 2.00 மணி வரை நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
கனமழை
இதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
இதேவேளை மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.