ரணில் அரசாங்கத்தில் பதவியேற்க மாட்டோம்: தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிப்பு

Gotabaya Rajapaksa Mano Ganeshan Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Kanamirtha May 14, 2022 07:05 AM GMT
Report

“பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது எனவும் ஆனால், அரசாங்கத்தை உடனடியாக காலில் இழுத்து வீழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும் மாட்டோம்” என தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,

அவரது அரசாங்கத்தில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு நன்றி கூறி, கொள்கை அடிப்படையில் அதை நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம்.

ஆனால் அதற்காக நாம் கட்சி அரசியல் செய்து கூச்சல், குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை. வாழ்வாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க அவரால் இயன்றதைப் பிரதமர் செய்யட்டும்.

ரணில் அரசாங்கத்தில் பதவியேற்க மாட்டோம்: தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிப்பு | We Will Not Take Office In Ranil Government

ரணில் விக்ரமசிங்க, எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எமக்கு நன்கு தெரியும். பலவீனம் பற்றி இப்போது பேசி ஜனரஞ்சக அரசியல் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியில் எவரும் விரும்பவில்லை. சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, ரணிலின் பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் முழுமனதுடன் வரவேற்கிறோம்.

இன்று நாட்டில் உணவு, மருந்து, எரிவாயு, எரிபொருள், உரம், மின்சாரம் என்பன இல்லை. பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்குக் குறைந்தபட்ச தீர்வுகளைக் காண புதிய அரசுக்கு அவகாசம் தேவை என்பதை நாம் ஏற்கிறோம். இவற்றுக்குக் குறைந்தபட்ச தீர்வுகளையாவது அவர் தரவேண்டும். பிரதமர் அதை செய்யட்டும்.

அதற்கு பொறுப்புள்ள கட்சியாக நாம் இடம் கொடுப்போம். ஆகவே இன்றைய சூழலில், நாடாளுமன்றத்தில் அவரது அரசின் காலை இழுத்து விடும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.

ரணில் அரசாங்கத்தில் பதவியேற்க மாட்டோம்: தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிப்பு | We Will Not Take Office In Ranil Government

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. நமது நாடு வாங்கியுள்ள கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாதுள்ளது. ஆகவே கடன் தந்தோரிடம் பேசி கடன் திருப்பி செலுத்துவதை மறு அட்டவணைப்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளைப் பெற அமெரிக்க டொலர் இல்லாமல் உள்ளது. இதற்காக நட்பு நாடுகளிடம் கடன்வழி உதவிகளை, நாணய மாற்று உதவிகளைப் பெற வேண்டும். இந்தியா இவற்றை ஏற்கனவே வழங்கி வருகிறது.

இவை இன்னமும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே உதவி தரும் நட்பு நாட்டுக் குழுமம் (Consortium) ஒன்றை ஏற்படுத்தப் பிரதமர் முயற்சி செய்கிறார். இது நல்லது. வரிகொள்கை சீரமைக்கப்பட வேண்டும்.

நாட்டின் குரலுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக ஒரு கால அட்டவணை தயாராக வேண்டும். இனிமேல் ராஜபக்சர்களுக்கு இந்நாட்டு அரசியலில் இடம் தர மக்கள் தயாரில்லை. இதை பிரதமர் புரிந்துகொண்டுள்ளார் என நம்புகிறோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US