ஈரானுக்கு இராணுவத்தை அனுப்ப மாட்டோம்: பிரித்தானிய பிரதமர் திட்டவட்டம்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் தனது நாட்டு இராணுவ வீரர்களை ஈரானுக்கு அனுப்பப் போவதில்லை என்றும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த மோதலில் பிரித்தானிய நேரடியாகப் பங்கேற்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இது எங்கள் போர் அல்ல, இதில் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்காப்பு நடவடிக்கை
பிரித்தானிய குடிமக்களின் உயிர்கள், நாட்டின் நலன்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள தங்களது நட்பு நாடுகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே தாங்கள் 'தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இருப்பினும், உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் பிரித்தானியா தொடர்ந்து ஈடுபடும் என்று பிரதமர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
அதே சமயம், ஈரான் ஏவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வழிமறித்து அழிப்பதற்காகப் பிரித்தானிய போர் விமானங்கள் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இராணுவ உதவி
மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு, பிரித்தானியாவின் இராணுவத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளவும் அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.

நேரடிப் போரைத் தவிர்த்தாலும், தனது நட்பு நாடுகளுக்குத் தேவையான மறைமுக இராணுவ உதவிகளைப் பிரித்தானியா தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.