"We Will Kill Trump" பரபரப்பை கிளப்பிய ஈரானின் புதிய விளம்பர பலகை

Donald Trump Iran World
By Shadhu Shanker Jul 16, 2026 10:41 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து, "We Will Kill Trump" (ட்ரம்பைக் கொல்வோம்) என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர பலகையொன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த விளம்பர பலகை தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாத்தளை மனிதப் புதைகுழி மர்மம்..! சித்திரவதை தடயங்களுடன் மீட்கப்பட்ட 155 எலும்புக்கூடுகள்

மாத்தளை மனிதப் புதைகுழி மர்மம்..! சித்திரவதை தடயங்களுடன் மீட்கப்பட்ட 155 எலும்புக்கூடுகள்

ட்ரம்பைக் கொல்வோம்

தெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பர பலகையில், கருப்பு நிற சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப் படுத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

அவரது தலைமுடி சீர்குலைந்த நிலையிலும், கண்களும் வாயும் மூடிய நிலையிலும், சிவப்பு நிற டையின் மீது கைகளை வைத்தபடி சித்தரிக்கப்பட்டுள்ளார். சவப்பெட்டியின் மீது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் "We Will Kill Trump" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

"We Will Kill Trump" பரபரப்பை கிளப்பிய ஈரானின் புதிய விளம்பர பலகை | We Will Kill Trump Iran New Billboard Us President

இந்த விளம்பர பலகை, அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னணியில் துக்கச் சுவர் போன்ற வடிவமைப்பும், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்கா - ஈரான் மோதல்..! சவூதி எல்லையில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பதற்றம்

அமெரிக்கா - ஈரான் மோதல்..! சவூதி எல்லையில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பதற்றம்

பிரம்மாண்ட விளம்பர பலகை

ஈரான், அரசியல் மற்றும் புரட்சிகர கருத்துகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இதுபோன்ற பிரம்மாண்ட விளம்பர பலகைகளை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானின் முக்கிய பகுதிகளில் இதுபோன்ற அரசியல் விளம்பரங்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பும், டொனால்ட் ட்ரம்பை விமர்சிக்கும் வகையில் "The Breaking Point" என்ற வாசகத்துடன் அவரது வாய் தைக்கப்பட்டிருப்பது போன்ற விளம்பர பலகையை ஈரான் வெளியிட்டிருந்தது.

மேலும், அமெரிக்க விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் ஈரானின் வலையில் சிக்கியிருப்பது போன்ற காட்சிகளும் அந்நாட்டின் விளம்பர பிரச்சாரங்களில் இடம்பெற்றுள்ளன.

உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்

உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்

சர்வதேச ரீதியில் பதற்றம்

அதேவேளை, ஈரானில் வெளியான ஒரு பழமைவாத நாளிதழ், அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததற்குப் பழிவாங்க வேண்டிய இலக்குகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

"We Will Kill Trump" பரபரப்பை கிளப்பிய ஈரானின் புதிய விளம்பர பலகை | We Will Kill Trump Iran New Billboard Us President

அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல வெளிநாட்டு தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய விளம்பர பலகை, ஈரான்-அமெரிக்கா இடையிலான ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US