நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம் - பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திர
எந்த சவால்கள் வந்தாலும் முகங்கொடுத்து நாட்டை முன்னெடுத்து செல்வோம் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
தம்பலகாமத்தில் இன்று (02) இடம்பெற்ற சமூக சக்தி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார சிக்கல்கள்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த நாட்டை பொருத்தமட்டில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பொருளாதார சிக்கல்கள் எரிபொருள் பிரச்சினை மக்களது வாழ்க்கை சுமை என பல சவால்கள் காணப்பட்டன.

ஆனால் இதனை படிப்படியாக மாற்றி நாட்டில் ஊழல் மோசடி வீண்விரயம் இல்லாத மிகவும் சிறப்பான அரசியல் கலாசாரத்தை கொண்ட நாட்டினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் கட்டியெழுப்ப நாங்கள் கடமைப்பட்டிருந்தோம். இதனை தொடர்ந்து பாரிய டிட்வா அனர்த்தத்துக்கும் முகங்கொடுத்திருந்தோம்.
இதனை மீட்க சிறப்பாக செயற்பட்டிருந்தோம். அதன் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட சவாலான போர் சூழல் பல மாதங்களாக நீடிக்கிறது. ஹோர்முஸ் நீரினை மூடப்பட்டுள்ளதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதாரத்துக்கு தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது” என குறிப்பிட்டார்.
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri