எண்ணப்படும் அரசாங்கத்தின் நாட்கள்! ஆட்சி மாற்றத்திற்காக இந்த வாரம் வீதிக்கிறங்கும் மற்றொரு அணி
ராஜபக்ச – விக்ரமசிங்க ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த அரசு நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக வீதியில் இறங்கக் காத்திருக்கும் மக்களுடன் ஒன்றிணைந்து இந்த வாரம் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்புக்காக வீதிக்கு இறங்கும் அணி
அரசாங்கத்தை கவிழ்க்க இந்த வாரத்திலிருந்து வீதி போராட்டங்களை தொடங்குவோம். தற்போதைய ஆட்சிக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கிறோம் என கூறியுள்ளா.
வாழ்க்கைச் செலவு 150 வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடியவில்லை.
இந்த வருடத்திற்கான ஐந்தாவது எரிபொருள் விலை உயர்வு மூலம் மக்கள் இன்னும் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை விற்பனை செய்யவும், தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்கவும் அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஆகவே இந்த ஆட்சியாளர்களை விரைவாக மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.