நாட்டின் நீதி எங்கு உள்ளது என்பதை தேடிப்பார்க்க வேண்டும்! சிறீதரன் எம்.பி
இந்த நாட்டினுடைய சட்டம் இந்த நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
கடலட்டை பண்ணை விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடலட்டை பண்ணை உருவாக்குவது தொடர்பில் மகிந்த அமரவீர கடற்றொழில் அமைச்சராக இருந்த போது 2017 மார்ச் 8ம் திகதி அரச வர்த்தமானியில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதிலே கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களையும் விட அதிகமான பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக 11 இடங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டை பண்ணைக்கு பொருத்தமான இடங்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலட்டை குஞ்சுகளை உருவாக்குவதற்காக அரியாலையில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம், அப்பகுதி பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்பட்ட பின்னரே இரண்டு பரப்பு காணிக்குள் கடலட்டை உற்பத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்ய யாழ் மாவட்டத்தில் அனுமதி பெற்றவர்கள் அதனைத் தாண்டி கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கெளதாரிமுனைக்கு வந்து இரண்டு ஏக்கரை வலுக்கட்டாயமாக பிடித்து அப்பகுதி மீனவ சங்கங்களின் அனுமதி, பிரதேச செயலக அனுமதி இல்லாமல் இன்னொரு நாட்டை சேர்ந்த நிறுவனம் இடத்தை பிடிக்கும் என்றால், அதற்கெதிராக முறைப்பாடு செய்து அறிவித்தும் இதுவரை அவர்கள் கைது செய்யப்படாமல் இருக்கின்றார்கள் என்றால் இந்த நாட்டினுடைய சட்டம் இந்த நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளது என்றார்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam