கொள்கை பிரகடனத்தின் பிரகாரம் செயற்படும் ஒரே அரசாங்கம் எமது அரசாங்கமேயாகும்
கொள்கை பிரகடனத்தின் பிரகாரம் செயற்படும் ஒரே அரசாங்கம் எமது அரசாங்கம் மட்டுமேயாகும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு விடயத்தையும் நாம் விலகிச் செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எமக்கு ஐந்து ஆண்டுகளுக்கான மக்கள் ஆணையை மட்டுமே வழங்கியுள்ளனர் என்ற யதார்தத்தை புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டிலிருந்து ஸ்தம்பித்திருந்த நாட்டையே நாம் பொறுப்பேற்று முன்னோக்கி நகர்த்தி வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு தேவையான காணிகளை கொள்வனவு செய்த காரணத்தினால் மஹிந்த ராஜபக்சவினால் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்து அவற்றை அங்குரார்ப்பணம் செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடிந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது இந்த நாடு ஸ்தம்பிதம் அடைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த நாட்டை வழமைக்குத் திருப்புவதற்கு எமக்கு ஓர் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பே எமக்கு வழங்கப்பட்ட பிரதான பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டம் கட்டமாக அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு தற்பொழுது அந்த பணி பூர்த்தியாகியுள்ளது என நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



