நாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேவை
இலங்கைக்கு அவசரமாக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தேவைப்படுவதாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பாரிய பிரச்சினைகள் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அந்த விடயங்களை கருத்தில் கொள்ளாது செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இவ்வளவு பிரச்சினை இடம்பெற்று வரும் நிலையில், சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் நீர்மூழ்கி கப்பல்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது விசாரணைகளை மேற்கொள்வது நிலக்கரி இறக்குமதி மோசடி மற்றும் அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைத்து கொள்வதற்கு என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டிற்கு தற்பொழுது அவசரமாக ஒரு எதிர்க்கட்சி தலைவர் தேவை என விளம்பரப்படுத்த வேண்டிய ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri