“தலைக்கணம் கொண்ட முட்டாள் ஆட்சி செய்து எமக்கு ஏற்பட்ட நிலை”-தனசிறி அமரதுங்க
தலைக்கணம் கொண்ட முட்டாள் ஆட்சி செய்ததால், உரமில்லாது, அறுவடையின்றி மக்கள் அழிந்து போயுள்ளதாகவும் இது சிறந்த படிப்பினை எனவும் தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
தலைக்கணம் கொண்ட முன்னாள் ஆட்சி செய்து, எமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை. உரமின்றி, அறுவடையின்றி நாம் அழிந்து போயுள்ளோம். தேயிலை பயிர் செய்கை முற்றாக அழிந்து விட்டது. இவை எமக்கு சிறந்த படிப்பினை என தனசிறி அமரதுங்க தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபையின் முன்னாள் மேயரான தனசிறி அமரதுங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆட்சிக்கு கொண்டு வரவும் முக்கியமான பங்களிப்பை செய்தவர்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையே முட்டாள் என அவர் தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.