பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கும் தயார்! அரசாங்க அச்சக மா அதிபர்
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கும் தயார் என அரசாங்க அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வேட்பாளர்கள் போட்டியிடுவதனால் ஒரே வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.
வாக்குச் சீட்டுக்களை வழங்க முடியும்
எனினும் பொதுத் தேர்தலின் போது மாவட்டத்திற்கு மாவட்டம் போட்டியிடும் வேட்பாளர் மாறுபடும் என்பதனால் அச்சுப் பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் ஆணைக்குழு கோரியதை விடவும் முன்கூட்டியே வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதேவிதமாக பொதுத் தேர்தலின் போதும் வாக்குச் சீட்டுக்களை வழங்க முடியும் எனவும் அதற்கு பணியாளர்கள் ஆயத்தத்துடன் இருக்கின்றார்கள் எனவும் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |