தமிழ் அரசியல்வாதிகளிடம் மனோ கணேசன் விடுத்துள்ள பகிரங்க சவால்
நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தமிழ் அரசியல்வாதிகளுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
நாட்டில் உருவாகி வரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
அமைச்சரவையில் இடம்
மேலும் தெரிவிக்கையில், தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்திருந்தால், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான அடுத்த நாளே அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கலாம்.
ஆனால், அதை நாம் செய்யவில்லை. ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்கள் ராஜபக்சர்களே. ராஜபக்ச ஆதரவு ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது.
2019 நவம்பர் 16ஆம் திகதி முதல் இன்றுவரை, நான்கு வருடங்கள் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம் நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன்.
வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
