யாழில் விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்ட தண்ணீர் தாங்கி
யாழ்ப்பாணம் (Jaffna) சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழக மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு வேளையில் விஷமிகளால் அடித்து நொருக்கபட்டுள்ளது என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் புலம்பெயர் தேச உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் குடி நீர் வழங்குமுகமாக நீர்தாங்கி ஒன்று அமைக்கபட்டுள்ளது.
சேதப்படுத்தியமை தொடர்பில்
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த நீர் தாங்கி விஷமிகளால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யபட்டுள்ள நிலையில் பலருக்கு பயன்தரு முகமாக அமைக்கப்பட்ட குறித்த திட்டத்தினை சேதப்படுத்தியமை தொடர்பில் பொதுமக்கள் தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


