இரு வீட்டார்களுக்கு இடையில் கைகலப்பு: ஒருவர் கைது
மண்வெட்டி தாக்குதலுக்கு உள்ளான நபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு வீட்டார்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய சம்பவம் நேற்று(03) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மண்வெட்டி தாக்குதலுக்கு உள்ளான நபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்
இந்த கைகலப்பில் திருகோணமலை-04ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 38வயதுடைய பிரசாத் சந்தன என்பவர் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலை மேற்கொண்ட, அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நிமால் பேமசிறி என்பவர் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கைது
இதன்போது கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை தாக்குதலினால் காயமடைந்தவரின் நிலைமை கவலைக்கிடமாக
இருப்பதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின், அதிதீவிர சிகிச்சை பிரிவின்
கடமை நேர வைத்திய பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.