குழந்தைகள் தொடர்பில் வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்மறையான விளைவுகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,''குழந்தைகள் தொடர்ந்தும், கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் போது அவர்களின் மனநிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

டிஜிட்டல் திரைகளை பயன்படுத்துவதனால் சிறுவர்களின் மூளை வளர்ச்சி வீதம் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், தங்களது வேலைகளை இலகுவாக முன்னெடுப்பதற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கையடக்க தொலைபேசிகளை வழங்குகின்றனர்.
எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை கையடக்க தொலைபேசி உள்ளிட்ட டிஜிட்டல் திரை பயன்பாட்டிலிருந்து இயலுமானவரை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.'' என அவர் தெரிவித்துள்ளார்.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan