பேரழிவு இறப்புக்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் குடிமக்கள் பெரும்பாலான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களைப் பெறுவதற்கான அணுகலை இழந்துள்ளனர்.
இதனால் அவர்கள் மனிதாபிமான பேரழிவுக்கான பாதையில் உள்ளனர் என்று இலாப நோக்கற்ற மனிதாபிமான அமைப்பான டிரெக்ட் ரிலீப்(Direct Relief ) எச்சரித்துள்ளது.
பிரதம மந்திரி தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, கருத்துரைத்த, டிரக்ட் ரிலீப் அமைப்பின்; முகாமையாளர் கிறிஸ் அலேவே இலங்கையின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
பேரழிவு
மேலும் தெரிவிக்கையில், “அடுத்த ஆறு மாதங்களுக்கு, பேரழிவு எண்ணிக்கையிலான இறப்புகளை தாம் எதிர்பார்க்கப்படுகின்றன்.
கொழும்பில் உள்ள 3,500 படுக்கைகள் கொண்ட இலங்கை தேசிய மருத்துவமனை, வழக்கமாக 1,300 மருந்துகளை கையிருப்பில் கொண்டுள்ளது, இப்போது 60 அத்தியாவசிய மருந்துகளை மட்டுமே அது கையிருப்பதாக கொண்டுள்ளது.
மருந்து பற்றாக்குறை
நாட்டில் மயக்க மருந்து பற்றாக்குறையாக இருப்பதாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உட்பட நாட்டில் பெரும்பாலான பொது அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அது கூறுகிறது. புற்றுநோயாளிகள் கொடிய நோயை எதிர்த்துப் போராடத் தேவையான மருந்துகளை இழந்துள்ளனர்.
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை பரிசோதனைக்காக தங்கள் சொந்த குளுக்கோஸ் மீட்டர்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். பல மருத்துவமனைகளில் அடிப்படை பொருட்கள் இல்லை.” என்று டிரக்ட் ரிலீப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.