அதிக வெப்பநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் சம்பந்தப்பட்ட பங்கஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் இந்திரா கஹவிட்ட எச்சரித்துள்ளார்.
இவ்வாறு ஏற்படும் நோய்களுக்கு தாமே மருந்துகள் எதனையும் எடுத்துக் கொள்ளாது உடனடியாக பொருத்தமான மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியம் என மருத்துவ நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.
அடையாளங்கள்
இந்நிலையில், அதிக சூரிய ஒளி படும் இடங்களில் இருப்பதே குறித்த நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்றும் அவ்வாறு தரித்திருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு மருத்துவ நிபுணர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறான சரும நோய் சிறு பிள்ளைகளின் முகத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதோடு உடலில் குறிப்பாக கைகளின் இடுக்குப் பகுதியில் வெள்ளை நிறத்தில் அதற்கான சில அடையாளங்கள் காணப்படலாம் எனவும் விசேட மருத்துவ நிபுணர் இந்திரா கஹவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |