வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாடு முழுவதும் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என எச்சரித்து ‘அம்பர்’ நிலை வானிலை எச்சரிக்கையை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று (09) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (10) காலை 8.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தின் தாழமுக்க நிலை காரணமாக தற்போதைய மோசமான வானிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் கடும் மழை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.