வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கு சட்ட நடவடிக்கை!

Sri Lanka Tourism Sri Lanka Sri Lanka Police Investigation Tourism
By Laksi Mar 26, 2025 06:00 PM GMT
Report

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முச்சக்கர வண்டிகளை செலுத்துவது அதிகரித்து வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், அண்மைக் காலங்களில் வெளிநாட்டினர் செலுத்தும் முச்சக்கர வண்டிகளால் உயிரிழப்பு மற்றும் கடுமையான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

அனுமதிப் பத்திரம்

அத்தோடு, வெளிநாட்டினரிடம் முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கான செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லை என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கு சட்ட நடவடிக்கை! | Warning For Provide Three Wheeler To Foreigner

மேலும்,முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கு வெளிநாட்டவர்களுக்கு சரியான பயிற்சியும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்ட தொடருந்து

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்ட தொடருந்து

சட்ட நடவடிக்கை

இந்த சூழ்நிலையைத் தடுக்க உரிய சாரதி அனுமதிப் பத்திரமின்றி வெளிநாட்டவர் முச்சக்கர வண்டியை செலுத்தினால், வாகனத்தின் உரிமையாளரை அழைத்து, வாக்குமூலம் பதிவு செய்து, நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கு சட்ட நடவடிக்கை! | Warning For Provide Three Wheeler To Foreigner

அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனங்களை வழங்கும் போது குறிப்பாக முச்சக்கர வண்டிகளை நாட்டினுள் செலுத்துவதற்கு வெளிநாட்டினருக்கு வழங்கும் போது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கிறார்களா என்பதை முறையாகச் சரிபார்த்து, அவர்களுக்கு உரிய வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வாகனங்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

விசாரணைகளை நடத்துவது குற்றப்புலனாய்வு பிரிவினரே : ஞானசார தேரருக்கு நளிந்த ஜயதிஸ்ஸ பதிலடி

விசாரணைகளை நடத்துவது குற்றப்புலனாய்வு பிரிவினரே : ஞானசார தேரருக்கு நளிந்த ஜயதிஸ்ஸ பதிலடி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US