மத்திய கிழக்கு பதற்றம்: பெரும் போராக வெடிக்கும் - அவசர தேவையை வலியுறுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர்
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தீவிர இராணுவ மோதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்ட் தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக ஈரான் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
சர்வதேச சட்டங்கள்
அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டினார்.

வன்முறையை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வருமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மோதல் போக்கு தொடர்ந்தால், அது பிராந்திய அளவில் பெரும் போராக வெடித்து பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அமைதியான முறையில் தீர்வு காண்பதே தற்போதைய அவசரத் தேவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam