இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக போர் குற்றச்சாட்டு
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வரலாற்றில் முதன் முறையாக பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 15 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு எதிராக நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலிகள் இந்த குற்றத்தை முன்வைத்துள்ளளனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
51 பக்கங்களை கொண்ட அந்த முறைப்பாட்டில் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்ப்டுள்ளதுடன் இராணுவ அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், புலனாய்வுப் பிரிவினர், விசேட அதிரடிப்படையின் முன்னாள தலைமை அதிகாரிகளுக்கு எதிராக போர் குற்றம் முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகில் எந்த நாட்டை சேர்ந்த பொலிஸ் துறையினர் மீதும் இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என அந்த வார இதழ் குறிப்பிட்டு்ளளது.
குளோாப் ரைட்ஸ் என்ற நெதர்லாந்தின் அரச சார்பற்ற நிறுவனம், சர்வதேச நீதிமன்றத்தின் வழக்குகள் தொடர்பான பணிப்பாளர் நென் நவ்பட்டிடம் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளது.
கமல் குணரத்ன, ஜகத் ஜயசூரிய, ஏ.சீ. ஆனந்தராஜா, சந்திரா பெர்னாண்டோ, விக்டர் பெரேரா, இந்திரா சில்வா, ஜயந்த விக்ரமரத்ன, நளின் இலங்ககோன், பூஜித் ஜயசுந்தர, சீ.டி.விக்ரமரத்ன, நிமல் லெவ்கே, நிமல் வாகிஸ்ட, கே.எச். சரத்சந்திர, எம்.சீ. ரணவக்க, கே.ஏ.ஆர். பெரேரா, சிசிர மெண்டிஸ், எம்.ஆர். லத்தீப் ஆகியோரத்து பெயர்கள் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிக்க 200 பேர் முன்வந்துள்ளனர். குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை கைது செய்யுமாறும் முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த முறைப்பாடு பிரித்தானியாவின் மெட்ரோபொலிட்டன் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச சட்டத்தை அமுல்படுத்துமாறு குளோப் ரைட்ஸ் அமைப்பு கோரியுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய எந்த ஐரோப்பிய நாடும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையின் பாதுகாப்பு துறை அதிகாரிகளை கைது செய்ய முடியும் எனவும் அந்த சிங்கள வார இதழ் குறிப்பிட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
