வனிந்து ஹசரங்கவின் புதிய சாதனை
இலங்கையின் வனிந்து ஹசரங்கா, ஒருநாள் சர்வதேச வரலாற்றில் வேகமாக 100 விக்கெட்டுகள் மற்றும் 1000 ஓட்டங்கள் எடுத்த வீரராக இரட்டை சாதனை படைத்துள்ளார்.
ஆர் பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது 27 வயதான ஹசரங்கா இந்த சாதனையை நிகழ்த்தினார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில்
65 போட்டிகளில் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டிய ஹசரங்கா, 68 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சகலதுறை வீரர் ஷான் பொல்லாக்கை முறியடித்துள்ளார்.
இந்த சாதனையின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 100 விக்கெட்டுகள் முதல் 1000 ஓட்டங்கள் வரை என்ற சாதனையைப் படைத்த 70வது வீரர் என்ற பெருமையை ஹசரங்கா பெற்றுள்ளார்.
இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியின் போது ஹசரங்கா ஏற்கனவே 1000 ஓட்டங்களைக் கடந்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் தனது 100வது ஒருநாள் விக்கெட்டைப் பதிவு செய்தார்.
,இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான நடந்து வரும் ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 10 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
