பெலாரஸ் இராணுவத்துடன் கூட்டு பயிற்சியில் வாக்னா் படையினா்!
ரஷ்யாவின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னா் குழு, அதன் அயல்நாடான பெலாரஸ் நாட்டு இராணுவத்துடன் கூட்டுப் பயிற்சியை தொடங்கியுள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இந்தப் போரில், வாக்னா் குழுவினா் மிக முக்கியப் பங்கு வகித்தனா்.
எனினும், அந்தத் தனியாா் படைக்கு ரஷ்ய இராணுவம் போதிய ஆயுதங்கள் அளிக்கவில்லை என்று வாக்னா் குழுத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் குற்றம் சாட்டி வந்தாா்.
இந்த நிலையில், இராணுவ தலைமைக்கு எதிராக கடந்த மாதம் 23-ஆம் திகதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்ட வாக்னா் படையினா், தலைநகா் மாஸ்கோவை நோக்கி முன்னேறினா்.
போலந்தில் ஏற்பட்ட பதற்றம்
எனினும், பெலாரஸ் நாட்டு ஜனாதிபதி அலெக்ஸாண்டா் லுகஷென்கோ இந்த விவகாரத்தில் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்துவைத்தாா்.
அதையடுத்து, கிளா்ச்சியைக் கைவிட்டு வாக்னா் படையினா் பெலாரஸில் தஞ்சமடைந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், போலந்து எல்லை அருகே வாக்னா் குழுவும், பெலாரஸ் ராணுவமும் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியை கடந்த தொடங்கின.
இது, நேட்டோ உறுப்பு நாடான போலந்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதால் அந்த நாட்டு எல்லைகள் பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
