வெளிநாடொன்றில் வெடித்து சிதறிய எரிமலை!
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்காவில் கிலாவியா எரிமலை வெடித்து சிதறியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, எரிமலை வெடிப்பை தொடர்ந்து, அதில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருவதுடன் இந்த நெருப்பு குழம்பானது சுமார் 400 அடி உயரம் வரை மேல்நோக்கி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தொடர்ந்து இந்த எரிமலையின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றது.
எரிமலை வெடிப்பு
இதற்கு முன்பு கடந்த காலங்களில் கிலாவியா எரிமலையில் வெடித்தபோது சுமார் 20 ஆயிரம் அடி உயரம் வரை நெருப்பு குழம்பு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது காற்றின் வேகம் காரணமாக எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் உள்ளிட்டவை தென்மேற்கு திசை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாகவும், தற்போது வரை ஹவாய் விமான நிலையத்தில் விமான போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam