திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கில் தமிழர்களின் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது: வியாழேந்திரன் (Photos)

Tamils Ranil Wickremesinghe S. Viyalendiran Eastern Province
By Rusath Jun 29, 2023 09:55 AM GMT
Report

கிழக்கில் மூவின மக்களும் வாழ்ந்து வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் அதிகம் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அவைகளைத் தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடத்தில் உள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (29.06.2023) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், மக்களுடைய உரிமை சார்ந்த விடையத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.

திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கில் தமிழர்களின் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது: வியாழேந்திரன் (Photos) | Viyalendiran S Comment On Tamil People

அபிவிருத்தி சார்ந்த விடயங்கள்

இந்த மாகாணத்தைப் பொறுத்தளவில், ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமே எங்கள் இனத்தினுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற தீர்க்கமாகக் கொள்கையுடன் பயணிக்கின்றோம்.

எனவே, உரிமை சார்ந்த விடயத்தில் எவ்வளவு விவேகமாகப் பயணிக்கிறோமோ, அதற்குச் சமமாக அபிவிருத்தி சார்ந்த விடயத்திலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களும் உரிமைக்குச் சமமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தமிழர்கள்.

திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கில் தமிழர்களின் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது: வியாழேந்திரன் (Photos) | Viyalendiran S Comment On Tamil People

தமிழர்களின் இன விகிதாசாரம்

பல திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. 

எனவேதான் எமது மக்களுடைய உரிமை சார்ந்த விடயங்களுக்குச் சமமான அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எம்மிடம் சுமத்தப்பட்டுள்ளது.

அதுபோல் கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல விடயங்களிலும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் 58.9 சதவீதமாகவிருந்த தமிழர்கள், தற்போது 38.6 சத வீதத்திற்கு வந்திருக்கின்றார்கள். இதற்குக் காரணம் கடந்த காலத்திலே மேற்கொண்டிருந்த திட்டமிட்ட குடியேற்றங்களாகும்.

திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கில் தமிழர்களின் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது: வியாழேந்திரன் (Photos) | Viyalendiran S Comment On Tamil People

இனங்களை சமமாக மதித்து வேலை

இந்நிலையில், வரலாற்றிலே கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கவில்லை. தற்போதுதான் ஜனாதிபதி தமிழர் ஒருவரைக் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமித்திருக்கின்றார். இது வரவேற்கக் கூடிய விடையமாகும். 

நாம் இன்னுமொரு இனத்தின் உடைமைகளைத் தட்டிப்பறிக்க வில்லை, மாறாக எமது இனத்தினுடைய விடயங்களை விட்டுக்கொடுக்கவும் தயாரில்லை.

தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான் அனைத்து இனங்களையும் சமமாக மதித்து வேலை செய்து கொண்டு வருகின்றார்.

ஆனால், முன்னாள் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்த பெண்ணின் செயற்பாடுகள் ஒரு இனத்தை மாத்திரம் வைத்துச் செயற்படுத்தியதாகக் காணப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதியுடனும் பேசியிருந்தோம்.

திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கில் தமிழர்களின் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது: வியாழேந்திரன் (Photos) | Viyalendiran S Comment On Tamil People

தொல்பொருள் திணைக்களம்

கிழக்கில் மூவின மக்களும் வாழ்ந்து வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் அதிகம் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அவைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடத்தில் உள்ளது.

நான் ஆளும் கட்சியில் இருந்தாலும் தவறுகளைச் சுட்டிப்பாட்டிக் கொண்டு மக்களுக்குச் சார்பாகத்தான் செயற்பட்டு வருகின்றேன்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றின் திணைக்களத் தலைவர்கள் மேல்மட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், போரதீவுப் பற்றுப பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US