டொனால்ட் ட்ரம்பிற்கு பொது மன்னிப்பு வழங்க தயார்: விவேக் ராமசாமி உறுதி
தாம் அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்டால் ட்ரம்ப்புக்கு பொது மன்னிப்பு வழங்கத் தயார் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
38 வயதான இந்திய வம்சாவளி அமெரிக்கரான தொழிலதிபர் விவேக் ராமசாமி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீண்டும் அதிபராக பரிந்துரைக்கப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த அதிபருக்கான போட்டியில் தமது பெயர் பரிந்துரைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தாம் அதிபரானால் ட்ரம்ப் மீது தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து விடுவிக்க தயார் என்றும் ட்ரம்ப்புடன் கொள்கை ரீதியாக பெரிய வேறுபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
