போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய யுவதியின் விசா இரத்து: இலங்கையில் இருந்து வெளியேறுமாறும் அறிவிப்பு
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரித்தானிய யுவதியின் விசாவை இரத்துச் செய்ய இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் பிரித்தானிய யுவதியை இந்த மாதம் 15 ஆம் திகதி திகதிக்கு முன்னர் இலங்கையில் இருந்து வெளியேறுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட விசா அனுமதியில் பிரித்தானிய யுவதி, இலங்கையில் தங்கியிருந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்ட களத்தின் சம்பவங்களை அவர் சமூக ஊடகங்கள் வழியாக ஒளிப்பரப்பினார் எனவும் பிரித்தானிய யுவதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
