ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்து சில வாரங்களில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ள உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
விராட் கோலி இதுவரை அதற்கு பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு
2024 டி20 உலகக்கோப்பையின் முடிவில் ரோகித் மற்றும் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்று இருந்தனர்.
இதனை தொடர்ந்து அண்மையில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்திருந்தார்.
தற்போது விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.
தற்போது 36 வயதாகும் நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகளாவது விராட் கோலி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
விராட் கோலி
2025 முதல் 2027 வரை நடைபெற உள்ள உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரில் அவர் முழுமையாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது 2025 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் விராட் கோலி இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
அவர் கடைசியாக நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஓட்டங்கள் குவிக்கவில்லை.அதனால் விமர்சனத்தையும் சந்தித்திருந்தார்.
விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ஓட்டங்கள் அடித்துள்ளார்.
இதில் 30 சதம், 31 அரைசதம் அடங்கும். ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்கள் அடித்தது ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |