திடீரென வெடித்த வன்முறை: பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு - செய்திகளின் தொகுப்பு (Video)
அமைதி ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவங்களைச் சூழ்ந்துள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அவசர முன்னுரிமை அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் பொலிஸ் அதிபரை வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் 14வது சரத்தின் அடிப்படையில் பொதுமக்கள், பேச்சு சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும், சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,