கிளிநொச்சி பாடசாலையில் குண்டர்கள் தாக்குதல்: பொலிஸ்மா அதிபருக்கு ஆளுநர் பணிப்புரை
கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் அடிதடியில் ஈடுபட்ட குண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபருக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றையதினம் (30.03.2023) கிளிநொச்சி சாந்தபுர கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீரென பாடசாலைக்குள் நுழைந்த நபர்கள் மாணவர்கள் மீதும் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய பணிப்புரை
சம்பவத்தில் காயமடைந்த மாணவி அடங்கலாக ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் கவனத்துக்கு சென்ற
நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கைது செய்து
சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆளுநர் பணிப்புரை
விடுத்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
