"என்னை அடிக்காதே எனக்கு குழந்தை உள்ளது..." - போராட்டக்காரர் மீது தாக்குதல் (காணொளி)
கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேசலவை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
பத்தரமுல்ல - கொஸ்வத்த பிரதேசத்தில் இன்று (10) மாலை சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கடுவலை துணை மேயர் ஆற்றிற்குள் இழுத்துச்செல்லப்பட்ட காணொளியினை பதிவேற்றியமைக்காகவே அவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை கடுவலை மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை நிகேஷல தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 16 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan