ஜேர்மனிக்கு பயணமான விஜித ஹேரத்
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (26.02.2026) ஜேர்மனிக்கு விஜயம் செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அமைச்சர் விஜித ஹேரத் ஜெர்மன்-ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளார்.
மாநாட்டில் உரையாற்ற ஏற்பாடு
வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஜேர்மன் வெளியுறவு அமைச்சருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனோஜனின் விடுதலைக்காக காத்திருக்கும் இலங்கை மக்கள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கோரிக்கை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!