சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களுக்கு துன்புறுத்தலா..! கசிந்துள்ள தகவல்
பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் 303 சட்டவிரோத புகழிட கோரிக்கையாளர்களான இலங்கையர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், தம்மை காப்பாற்றி குடியேற்ற நாடொன்று தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தாங்கள் தொடர்ந்தும் அச்சத்தில் இருப்பதாகவும் தங்களை மீட்ட அதிகாரிகள் தங்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளது.
எனவே அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த படகில் பயணம் செய்த ஒருவர் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே குறித்த விடயங்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 16 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam